துக்க நிகழ்வுல கலந்துக்கக் கூட தகுதியில்லாத ஆளு! வடிவேலுவை இப்படி பேசுனவரு யாருப்பா?

Bala
திங்கள், 17 நவம்பர் 2025 (12:31 IST)
தமிழ் சினிமாவில் காமெடியில் ஒரு கட்டத்தில்  கொடிகட்டி பறந்தவர் நடிகர் வைகைப்புயல் வடிவேலு. கவுண்டமணி செந்தில் பிரீயடில் சினிமாவில் உள்ளே நுழைந்த வடிவேலு அவர்களுடன் துணை கதாபாத்திரத்தில் ஆரம்பகால படங்களில் நடித்து வந்தார். கவுண்டமணியிடம் ஒரு சில படங்களில் அடி வாங்கிக் கொண்டு நடிக்கவும் செய்திருகிறார். அதன் பிறகு 90கள் காலகட்டத்தில் வடிவேலுதான் முன்னிலையில் வந்தார்.

குறிப்பாக தேவர் மகன் திரைப்படத்தில் அவருடைய காமெடியான குணச்சித்திர கேரக்டர் ரசிக்கும்படியாக அமைந்தது. ஒரு பக்கம் வடிவேலு இன்னொரு பக்கம் விவேக் என காமெடியில் இரட்டையர்களாக ஆட்சி செய்து வந்தனர். இருவருமே தனித்தனியான பாணியில் ரசிகர்களை ரசிக்க வைத்து வந்தனர். எப்பொழுது விஜயகாந்துக்கு எதிராக அதிமுகவிற்கு எதிராக பேச ஆரம்பித்தாரோ அதிலிருந்தே அவருடைய கெரியர் ஸ்பாயில் ஆனது.
 
ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தார் வடிவேலு. ஆனால் முன்பு மாதிரி அவருடைய படங்கள் எடுபடவில்லை. ஏன் அவருடைய காமெடி எக்ஸ்பியரி ஆனது. இருந்தாலும் குணச்சித்திர கேரக்டரில் அவரை நடிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வடிவேலுவை பற்றி பிரபல நடிகரும் இயக்குனருமான பாரதிகண்ணன் ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். 
 
வடிவேலுவின் கெரியரில் அவரை தூக்கி நிறுத்திய படங்களான வரவு எட்டணா செலவு பத்தனா, விரலுக்கேத்த வீக்கம் போன்ற படங்களை குறிப்பிடலாம். இந்தப் படத்தை எடுத்தவர் வி.சேகர். சமீபத்தில் அவர் காலமானார். அவருடைய இறப்புக்கு திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். ஆனால் வடிவேலு மட்டும் வரவில்லை. வி.சேகருக்கு மட்டுமில்லை. எத்தனையோ முக்கிய பிரபலங்கள்  மறைவுக்கு அஞ்சலி செலுத்த வடிவேலு வரவே இல்லை.
 
ஒரு சம்பிரதாயத்துக்காவது போனில் பேசியிருக்கலாம். சில நேரங்களில் தன்னுடைய தகுதி நிலை அறிந்தும் வார்த்தைகளை விடவேண்டும். துக்க நிகழ்வில் கலந்து கொள்ள பாக்கியம் இல்லை என்று சொல்வதை விட அவருக்கு தகுதில்லை என்றுதான் சொல்ல வேண்டும் என பாரதிகண்ணன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துக்க நிகழ்வுல கலந்துக்கக் கூட தகுதியில்லாத ஆளு! வடிவேலுவை இப்படி பேசுனவரு யாருப்பா?

Lik படத்தின் டிஜிட்டல் வியாபாரத்தில் மீண்டும் ஒரு சிக்கலா?... ரிலீஸ் தேதி மாறுமா?

கருப்பு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியையே மீண்டும் ஷூட் செய்கிறதா படக்குழு?

மூன்று நாட்களில் ‘காந்தா’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் இணைந்த சாய் அப்யங்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments