Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமலா பாலுக்கு எப்போவோ கல்யாணம் ஆகிடுச்சு... இப்போ இதுவும் சண்டையில் போகுதாம்...!

அமலா பாலுக்கு எப்போவோ கல்யாணம் ஆகிடுச்சு... இப்போ இதுவும் சண்டையில் போகுதாம்...!
, சனி, 21 மார்ச் 2020 (11:28 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை இரண்டு வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆன நிலையில் அமலா பாலும் மும்பையை சேர்ந்த பாடகர் ஒருவரை காதலித்து வருவதாக கூறியிருந்தார்.

இதற்கிடையில் யாருக்கும் சொல்லாமல் திடீரென திருமணம் செய்துள்ளார் அமலா பால். நேற்று கல்யாண புகைப்படங்களை  பாவ்னிந்தர் சிங் இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார். ஆனால், வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே புகைப்படங்களை டெலீட் செய்ததுடன் இன்ஸ்டா பக்கத்தையே அவர் நீக்கிவிட்டார். காரணம், அமலா பாலுக்கு தெரியாமல் பாவ்னிந்தர் சிங் திருமண போட்டோக்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனை ரகசியமாக வைத்திருக்க சொன்ன அமலா பால் கண்டித்ததால் புகைப்படங்களை நீக்கி இன்ஸ்டாகிராம் பக்கத்தையே நீக்கியுள்ளார் பாவ்னிந்தர் .

இதனால் இவர்களுக்குள் சிறிய சண்டை ஏற்பட்டுள்ளதாகவும் கொளுத்தி போட்டு  வருகின்றனர். இதனை அறிந்த நெட்டிசன்ஸ் எது எப்படியோ இந்த வாழ்க்கையாவது சந்தோசமாக அமையட்டும் என கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்யாணம் ஆகிட்டா என்ன இப்படி பண்ணக்கூடாதா? கடுப்பு கெளப்பாம போய்டுங்க...!