Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் உடனான விவாகரத்திற்கு தனுஷ் காரணமா...? முன்னாள் மாமனாருக்கு அமலா பால் பதில்!

விஜய் உடனான விவாகரத்திற்கு தனுஷ் காரணமா...? முன்னாள் மாமனாருக்கு அமலா பால் பதில்!
, செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (11:56 IST)
பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகன் ஏ.எல்.விஜய், கீரிடம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ’பொய் சொல்லப் போறோம்’, ‘மதராச பட்டினம்’, ‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’, ‘சைவம்’, ‘தேவி’ ஆகிய படங்களை இயக்கினார். 
 
தெய்வ திருமகள் படத்தின் போது அந்த படத்தில் நடித்த அமலா பாலுடன் காதல் வயப்பட்டு 2014 ஆம் திருமணம் செய்துக்கொண்டு, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பர மனதுடன் விவாகரத்து பெற்றனர். அதன் பின்னர் ஏ. எல் விஜய்  ஐஸ்வர்யா (MBBS) என்ற பெண்ணை 2வது திருமணம் செய்துகொண்டார். இது குறித்து சமீபத்தில் ஏ.எல்.விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பனிடம் பேட்டி எடுத்தபோது " விஜய் மற்றும் அமலா பாலின் விவாகரத்திற்கு தனுஷ் தான் காரணம் என கூறியிருந்தார். 
 
இது குறித்து அண்மையில் அமலா பால் பங்கேற்ற பேட்டி ஒன்றில் கேட்டபோது அதற்கு பதிலளித்த அவர், இப்போது என் விவாகரத்து சர்ச்சை தேவையற்றது. மேலும் இது என் தனிப்பட்ட விஷயம். நானாக யோசித்து முடிவெடுத்தது தான் இதற்கு யாரும் காரணம் இல்லை. தனுஷ் என்னுடைய நலம் விரும்பி. மேலும், கூடிய விரைவில் என்னுடைய இரண்டாம் திருமணத்திற்கான அறிவிப்பை வெளியிடுவேன் என கூறினார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்மா என்னை எரித்துவிடுங்கள் – பின்னணி பாடகியின் உருக்கமான தற்கொலைக் கடிதம் !