கல்யாணம் ஆகிட்டா என்ன இப்படி பண்ணக்கூடாதா? கடுப்பு கெளப்பாம போய்டுங்க...!

சனி, 21 மார்ச் 2020 (10:50 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

பின்னர் 8 வருட  காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்ககளில் நடித்து வருகின்றனர். இதற்கிடையில் படத்தின் ஷூட்டிங் முடிந்து கொஞ்சம் விடுமுறை கிடைத்தால் இருவரும் அவுட்டிங் சென்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அவரை சுற்றி இருப்பவர்களோ வேலையில்லாமல் எதையாவது கிளறிவிட்டு சம்முவை கடுப்பேற்றி வருகின்றனர்.

அதாவது சொல்ல வர விஷயம் என்னவென்றால், சமீபத்தில் சமந்தா பங்குபெற்ற நேர்காணல் ஒன்றில், " நான் உடை அணிவதை குறித்து பலரும் என்னை விமர்சித்து வருகின்றனர். ஏன்? திருமணம் ஆகிவிட்டால் இப்படி இருக்கக்கூடாதா? திருமணத்திற்கு பின்  நான் அணிந்து சென்ற உடைகளை வைத்து சமூகவலைத்தளங்களில் விமர்சிக்கின்றனர். ஏன் ஒரு பெண் திருமணத்திற்கு பின் மாடர்ன் உடை அணியக் கூடாதா? இது எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது என கோபத்துடன் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஆல்யாவுக்கு குழந்தை பொறந்தாச்சு... அப்பாவான சஞ்சீவிற்கு குவியும் வாழ்த்துக்கள்!