Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டத்தை திசை திருப்பிய 8 சிக்ஸர்கள்: ராஜஸ்தான் அணி அபார வெற்றி!

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (06:31 IST)
ஆட்டத்தை திசை திருப்பிய 8 சிக்ஸர்கள்: ராஜஸ்தான் அணி அபார வெற்றி!
நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 12 பந்துகளில் அடிக்கப்பட்ட 8 சிக்ஸர்கள் திடீரென ஆட்டத்தை திசை திருப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி மிக அபாரமாக விளையாடி 223 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 224 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி ஆரம்பத்திலேயே அடித்து விளையாடியது. 10 ஓவர்கள் வரை 10 ரன்ரேட் இருந்ததால் அந்த அணி இலக்கை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
இருப்பினும் 17வது ஓவர் முடிவில் அந்த அணி 173 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்ததால் 3 ஓவர்களில் 51 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது 
 
இந்த நிலையில் அதுவரை தடவி தடவி அடித்துக்கொண்டிருந்த ராகுல் திவேட்டியா திடீரென விஸ்வரூபம் எடுத்து கார்ட்டல் வீசிய 18-வது ஓவரில் 5 சிக்சர்கள் அடித்தார். இதனால் வெற்றிக்கு தேவை 2 ஓவர்களில் 21 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டது 
 
அடுத்ததாக முகம்மது ஷமி வீசிய 19வது ஓவரில் ஆர்ச்சர் 2 சிக்சர்களும், திவேட்டியா ஒரு சிக்ஸரும் அடித்ததால் ஆட்டம் தலைகீழாக மாற்றிவிட்டது. 20வது ஓவரில் வெற்றிக்கு தேவை 2 ரன்கள் என்று மட்டுமே இருந்த நிலையில் டாம் கர்ரன் மிக எளிதாக ஒரு பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார் 

தொடர்புடைய செய்திகள்

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: DLS முறையில் வெற்றி பெற்ற இங்கிலாந்து.. நமீபியா ஏமாற்றம்..!

ஒழுங்கு நடவடிக்கையாக ஷுப்மன் கில் இந்திய அணியில் இருந்து விடுவிப்பு… பிசிசிஐ அதிரடி!

அடுத்த கட்டுரையில்
Show comments