சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் இல்லை.. ஆட்ட முடிவிலாவது மாற்றம் வருமா?

Mahendran
புதன், 30 ஏப்ரல் 2025 (19:29 IST)
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது . இந்த ஆட்டத்தில் டாஸ்  வெற்றி பெற்ற பஞ்சாப் அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர், முதலில் பந்து வீச்சை செய்யத் தீர்மானித்துள்ளார்.
 
பஞ்சாப் அணியின் வீரர் மேக்ஸ்வெல்லுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, அவருக்குப் பதிலாக மாற்றாக எவரையும் சேர்க்க முடியவில்லை என அவர் விளக்கமாக கூறியுள்ளார்.
 
மாறாக, சிஎஸ்கே அணியில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை என்று கேப்டன் தோனி உறுதி செய்தார்.
 
சிஎஸ்கே அணி:
ஷேக் ரஷீத், ஆயுஷ் மத்ரே, சாம் கர்ரண், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, தீபக் ஹூடா, எம். எஸ். தோனி, நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பதிரானா.
 
பஞ்சாப் கிங்ஸ் அணி:
பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர், ஜோஷ் இங்லீஷ், நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், ஹர்பிரீத் ப்ரார், மார்கோ ஜான்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், சூர்யன்ஷ் ஷெட்ஜ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.
 
புள்ளிப்பட்டியலில் தற்போதைய நிலையில் 10-வது இடத்தில் நிலைகொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தங்களது இடத்தை மேம்படுத்துமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
 
 Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments