Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“தோனி யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை… ஆனால்?”… கில்கிறிஸ்ட் கொடுத்த அட்வைஸ்!

vinoth
புதன், 30 ஏப்ரல் 2025 (15:01 IST)
நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கேப்டன் ருத்துராஜ் கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகினார். அவருக்குப் பதில் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். ஆனாலும் ‘எந்தப் பயனும் இல்லை’ என ரசிகர்கள் புலம்பித் தவிக்கின்றனர்.

தற்போது வரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சி எஸ் கே அணி அதில் ஆறில் தோற்றுள்ளது. இதன் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றால்தான் சி எஸ் கே அணி ப்ளே ஆஃப் செல்ல முடியும். ஆனால் சி எஸ் கே அணியின் தற்போதைய பலத்தை வைத்துப் பார்க்கும் போகும் அதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்று தோன்றுகிறது. தோனியே ‘அடுத்த சீசனுக்கான அணியை உருவாக்குகிறோம்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்தப் பேச்சுகள் மீண்டும் எழத் தொடங்கியுள்ளன. இதுபற்றி பேசியுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் “தோனி, யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கேத் தெரியும். ஆனால் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர் அடுத்த சீசனில் ஓய்வு பெற்றுவிடலாம். நீங்கள் ஒரு சாம்பியன் எம். எஸ். எப்போதும் உங்கள் மீதான அன்பு மற்றும் மரியாதை உள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments