Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“இப்போ எங்களுடைய இலக்கு இதுதான்… அதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டோம்” – மைக் ஹஸ்ஸி கருத்து!

Advertiesment
சிஎஸ்கே

vinoth

, புதன், 30 ஏப்ரல் 2025 (08:02 IST)
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை அணி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் தோற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சில மாறுதல்களை செய்த போதும் பேட்டிங்கில் அது எந்த வகையிலும் பலனளிக்கவில்லை. இந்த தோல்வியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப்க்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்த சீசனில் சென்னை அணித் தங்கள் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் ஐந்து முறைத் தோற்றுள்ளது. இதுவரை எந்தவொரு சீசனிலும் இப்படி அதிகபட்சத் தோல்விகளை சந்தித்ததில்லை. இது ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்தடுத்தப் போட்டிகளுக்கான டிக்கெட்கள் விற்பனையில் அது பிரதிபலிக்கிறது.

இந்நிலையில் சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி பேசுகையில் “இனிமேல் உள்ள போட்டிகளை வெல்வதுதான் எங்கள் இலக்கு. மேலும் இளம் வீரர்களைக் கண்டடைவதற்கான திட்டத்தையும் நாங்கள் தொடங்கிவிட்டோம்” எனப் பேசியுள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனவெல்லாம் பலித்ததே.. மகனுக்காக நிலத்தை விற்ற சூர்யவன்ஷியின் தந்தை…!