Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’கோவிந்தா.. கோவிந்தா..!’ திருப்பதியில் RCB கேப்டன் ரஜத் படிதார் சாமி தரிசனம்!

Advertiesment
RCB Players Tirupathi Darishan

Prasanth Karthick

, புதன், 30 ஏப்ரல் 2025 (14:18 IST)

ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி அதிரடியாக விளையாடி வரும் நிலையில் இன்று ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

 

நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசன் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் ஆட்டம் தனி ரகமாக இருந்து வருகிறது. கடந்த 18 ஆண்டுகளாக ஐபிஎல் விளையாடி வரும் ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறைக் கூட கோப்பை வெல்லாத நிலையில், இந்த முறை தொடர் வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

 

இதனால் ஆர்சிபி அணி இந்த முறை கோப்பையை வெல்வது உறுதி என உற்சாகமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

 

இந்நிலையில் அணியின் வெற்றிக்காக ஆர்சிபி அணி கேப்டன்  ரஜத் படிதார் திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்துள்ளார். அவருடன் ஜிதேஷ் சர்மா, ஆர்சிபி மகளிர் அணி வீராங்கனை ஷ்ரெயங்கா பாட்டில் ஆகியோரும் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் ஹீரோவான சூர்யவன்ஷி… படையெடுக்கும் பாலோயர்ஸ்!