நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் அணியின் 14 வயது பையன் வைபவ் 38 பந்துகளில் சதம் அடித்த நிலையில் அந்த அணி அபாரமாக வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. கேப்டன் சுப்மன் கில் அபாரமாக பேட்டிங் செய்து 84 ரன்கள் எடுத்தார்.
இதனை அடுத்து, 210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியின் வைபவ் சூரியவம்சி என்ற 14 வயது பையன், 38 பந்துகளில் 101 ரன்கள் அடித்தார். இதில் 11 சிக்ஸர்கள் மற்றும் ஏழு பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான ஜெயஸ்வால் 70 ரன்கள் அடித்த நிலையில், ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணிக்கு 6 புள்ளிகள் கிடைத்தாலும், அந்த அணி அடுத்த சுற்று செல்ல தகுதி இல்லை. இருந்தாலும், இந்த வெற்றி அந்த அணிக்கு கிடைத்த ஆறுதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் குஜராத் அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதலிடத்தில் பெங்களூரு, இரண்டாவது இடத்தில் மும்பை அணிகள் உள்ளன.