5 விக்கெட் இழந்தவுடன் டிக்ளேர் செய்தது தென்னாப்பிரிக்கா.. இந்தியாவுக்கு 500க்கு மேல் இலக்கு..!

Mahendran
செவ்வாய், 25 நவம்பர் 2025 (14:51 IST)
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஐந்து விக்கெட்டுகளை இழந்தவுடன் தென்னாபிரிக்க அணி டிக்ளர் செய்த நிலையில், இந்திய அணி வெற்றி பெற 549 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 260 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. இந்தியா தனது முதல் இன்னிங்சில் 201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகிய நிலையில், தற்போது அந்த அணி வெற்றி பெற வேண்டும் என்றால் 549 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 94 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ஜடேஜா நான்கு விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
549 ரன்கள் என்ற இலக்கை நோக்கி, இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்யக் களத்தில் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WPL மெகா ஏலம் 2026: அதிக விலைக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா.. ஏலம் போகாத ஒரே வீராங்கனை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்..!

இந்திய அணி வெற்றி பெற்றபோது கவுதம் காம்பீரை ஏன் பாராட்டவில்லை? கவாஸ்கர் கேள்வி..!

WBBL தொடரில் இருந்து திடீரென விலகிய ஜெமிமா.. ஸ்மிருதி மந்தனா காரணமா?

மகளிர் பிரீமியர் லீக் 2026 ஏலம் எப்போது? தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், சோஃபி டிவைனுக்கு பெரும் கிராக்கி..!

நான் சந்தித்ததிலேயே கோலிதான் GOAT… மிட்செல் ஸ்டார்க் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments