கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Mahendran
திங்கள், 6 ஜனவரி 2025 (12:59 IST)
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான 18 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடியாக ரத்து செய்து உத்தரவு பிறப்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கள்ளக்குறிச்சி  கள்ளச்சாராயம் மரணம் தொடர்பான வழக்கில் 18 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இதனை அடுத்து தங்கள் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து 18 பேர் தாக்கல் செய்த மனு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கு ஜனவரி 6ஆம் தேதி விசாரணைக்கு நடைபெறும் என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்திருந்தது.
 
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது   கள்ளக்குறிச்சி கள்ளச்சார வழக்கில் 18 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 
 
கைதானவர்கள் 6 மாதங்களுக்கு மேல் சிறையில் இருப்பதால், இனி அவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் இருப்பதில் என்ன தேவை உள்ளது? என நீதிமன்றம் கேள்வி. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

கொல்கத்தா நிகழ்வின்போது ஏற்பட்ட குழப்பம்.. மெஸ்ஸியிடம் மம்தா பானர்ஜி வருத்தம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: வீட்டின் கதவை உடைத்து கைது செய்ததாக தகவல்..!

கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸி ரசிகர்கள் ரகளை: ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments