வக்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்த விஜய்..!

Siva
திங்கள், 14 ஏப்ரல் 2025 (08:45 IST)
வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
மத்திய அரசு சமீபத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை அடுத்து, உடனடியாக இது அமலுக்கு வந்தது என்பது தெரிந்தது.
 
இந்த சட்டத்திற்கு எதிராக திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்நிலையில், தற்போது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யும் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார்.
 
மற்ற கட்சிகளின் மனுக்களுடன் விஜய்யின் மனுவும் சேர்த்து விசாரணை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஏற்கனவே வக்பு சட்டத் திருத்தத்திற்கு கண்டனம் தெரிவித்து விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பதும், தற்போது சட்டநடவடிக்கையும் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments