Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்யை நடிக்க வைக்க எந்த இயக்குனரும் முன்வரவில்லை… SAC பகிர்ந்த பிளாஷ்பேக்!

Advertiesment
விஜய்
, ஞாயிறு, 13 ஏப்ரல் 2025 (11:58 IST)
நடிகர் விஜய்யின் சினிமா வளர்ச்சிக்கு விதை போட்டு அவரை இன்று விருட்சமாக்கியவர்களில் எஸ் ஏ சந்திரசேகரன் முக்கியமானவர். அவர் தொடர்ந்து விஜய்யை வைத்து படங்களை இயக்கி அவரை மக்களுக்குப் பரிச்சயமாக்கினார். அதன் பின்னர் விஜய்க்காக கதைகளைக் கேட்டு ஓகே செய்வதும் அவர்தான்.

ஆனால் கடந்த சில வருடங்களாக விஜய்க்கும் அவருக்கும் இடையில் சுமூகமான உறவு இல்லை. குறிப்பாக விஜய் பெயரில் அவர் அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் சம்மந்தமாக விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையே வேறுபட்ட கருத்துகள் எழுந்ததும், எஸ் ஏ சி தன் கருத்தை விஜய் மேல் திணிப்பதுமே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது விஜய் பற்றி எஸ் ஏ சி ஒரு சுவாரஸ்ய தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “விஜய் நடிகராக வேண்டுமென ஆசைப்பட்ட போது அவரது ஆல்பத்தை வைத்துக் கொண்டு எல்லா இயக்குனர்களின் அலுவலகத்துக்கும் ஏறி இறங்கினேன். ஆனால் யாரும் அவரை வைத்து படம் இயக்க முன்வரவில்லை. அதனால்தான் நானே அவரை வைத்துப் படம் இயக்கினேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் முதல்படம் வந்தபோது நிறைய பெண் ரசிகைகள் இருந்தார்கள்… நடிகர் ஷாம் பகிர்வு!