நடிகர் ஷாம் 12 B படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்பாக அவர் விஜய்யின் குஷி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றியிருப்பார். அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஜீவா தன்னுடைய 12 B படத்தில் அவரை அறிமுகப்படுத்த, அந்த படத்தில் அப்போதைய சூப்பர் ஸ்டார் நடிகைகளான ஜோதிகா மற்றும் சிம்ரன் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.
அதன் பிறகு சில ஹிட் படங்களில் நடித்த ஷாம், அதன் பின்னர் சறுக்கி இப்போது இருக்குமிடம் தெரியாமல் இருக்கிறார். அவர் கடைசியாக விஜய்யின் வாரிசு மற்றும் கோலி சோடா 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது அவர் அளித்துள்ள நேர்காணலில் முதல் பட ரிலீஸின் போது கிடைத்த வரவேற்புக் குறித்து பேசியுள்ளார்.
அதில் “12 B படத்தில் எனக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. நிறைய பெண் ரசிகைகள், குறிப்பாக காலேஜ் செல்லும் பெண் ரசிகைகள் இருந்தார்கள். அந்த படம் ரிலீஸான போது நான் 14 தடவை பார்த்தேன். அப்போது முன்னணி நடிகைகளாக இருந்த சிம்ரன் மற்றும் ஜோதிகா ஆகிய இருவருமே எனக்கு ரொம்ப ஆதரவாக இருந்தாங்க” எனக் கூறியுள்ளார்.