தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் இன்று டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை சந்தித்து தமிழக நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்
ஒரு மாநிலத்தின் முதல்வர் அவ்வப்போது அந்த மாநிலத்தின் நிலவரங்கள் குறித்து உள்துறை அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கமான ஒன்று. ஆனால் தமிழக கவர்னர் இன்று திடீரென டெல்லி சென்று நேரில் உள்துறை அமைச்சரை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அது மட்டுமன்றி நாளை அவர் பிரதமர் மோடியையும் சந்தித்து பேசவிருப்பதாகவும், இந்த சந்திப்பின் போது பல முக்கிய ஆலோசனைகள் செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
அடுத்தடுத்து உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமரை தமிழக ஆளுநர் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மட்டுமின்றி தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பம் ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது
இன்னும் இரண்டு வாரங்களில் தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது