Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காந்தி இருந்திருந்தால் 'ரத்தக் கண்ணீர் 'விட்டிருப்பார் - புதுவை முதல்வர் குற்றச்சாட்டு

Advertiesment
காந்தி இருந்திருந்தால் 'ரத்தக் கண்ணீர் 'விட்டிருப்பார் -  புதுவை முதல்வர்  குற்றச்சாட்டு
, வியாழன், 3 அக்டோபர் 2019 (15:41 IST)
நேற்று ( அக்., 2) காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்தியாவில் இருந்து, பல முறை முறை அமைதிக்கான நோபல் பரிசுக்கு, காந்தியின் பெயரை சிபாரிசு செய்தனர். ஆனால் காந்திக்கு அந்த விருது கிடைக்கவில்லை. இருப்பினும் காந்திக்காக நோபல் குழு கமிட்டி ஒரு வருடம் அமைதிக்கான நோபல் பரிசை நிறுத்தி வைத்தது.
எத்தனையோ அறிஞர்கள் மற்றும் கலைஞர்கள் எல்லாம் இந்த நோபல் பரிசுக்கு சொந்தக் காரர்களாக இருந்தாலும்கூட அவர்கள் அத்தனை பேரையும் நாம் அன்றாடமும் நினைப்பதில்லை.
 
ஆனால் காந்தியின் கொள்கை அகிம்சைக் கோட்பாடுகள்,அவர் உதித்த தத்துவங்கள் எல்லாம் காலம் கடந்து பல தலைமுறைகளைக் கடந்து நம் மீது தாக்கம் செலுத்திக் கொண்டுள்ளது. அது அவரது ஆளுமைக்கு கிடைத்த பரிசாகும். அது நோபலை விட உயர்ந்ததே ஆகும்.
 
இந்நிலையில் காந்தி உயிருடன் இருந்திருந்தால், மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை பார்த்து கண்ணீர் விட்டு அழுதிருப்பார் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

அவர் கூறியுள்ளதாவது : தமிழ் மொழி குறித்து பிரதமர் மோடி பேசுவதும், அதேநேரத்தில் அமித்ஷா ஒரே மொழி என்று கூறுவதும் பொஜகவின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது. அமித் ஷா கூறியுள்ளதுபோல் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஆகியவை எந்தக்  காலத்திலுக் நிறைவேறாது. இந்தியாவில் 6கோடிபேர் வேலையை இழந்துள்ளனர். இந்த நிலையில் காந்தி இன்று உயிருடன் இருந்திருந்தால் பாஜகவின் ஆட்சியைப் பார்த்து ரத்தக் கண்ணீர் வடித்திருப்பார் என்று தெரிவித்தார்.
 
கடந்த ஜனவரி 30 ஆம் நாள் அன்று காந்தியின் நினைவு நாளில், உத்திரபிரதேசம் அலிகாரில் இந்து மகாசபா தேசிய செயலாளர் சக்குண் பாண்டே,  காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரபை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சங்க தேர்தலின் வாக்குகள் எண்ணிக்கை எப்போது??