Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமர் தமிழை உயர்த்தி பேசுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது: கமல்ஹாசன்

பிரதமர் தமிழை உயர்த்தி பேசுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது: கமல்ஹாசன்
, வியாழன், 3 அக்டோபர் 2019 (22:21 IST)
இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில மாதங்களாக தமிழகத்திற்கு வந்தாலும், தமிழகத்திற்கு வெளியே வேறு மாநிலங்களுக்கு சென்றாலும், வெளிநாடுகள் சென்றாலும் ஏன் ஐநாவில் பேசினாலும் தமிழை பற்றி ஒருசில வார்த்தைகளாவது பேசாமல் இருப்பதில்லை. இதனால் பிரதமருக்கு தமிழ்ப்பற்று அதிகரித்துள்ளதாகவும், அதனால் அவருக்கு தமிழர்கள் நன்றி சொல்ல வேண்டும் என்றும் பாஜகவினர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழை தொடர்ந்து உயர்த்தி பேசுவதற்கு ஒரு காரணம் இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்காகத்தான் பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழை பற்றி புகழ்ந்து பேசுகிறார் என்றும் எந்த இடத்திற்கு சென்றாலும் அந்த இடத்திற்கு ஏற்ற போல் தொப்பி உள்ளிட்ட உடைகளை பிரதமர் மோடி அணிந்து கொள்வது போல தான் இதுவும் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்

இருப்பினும் ஒரு நாட்டின் பிரதமர் தமிழ் மொழியை பற்றி பேசினால் அந்த நாட்டில் உள்ளவர்கள் மட்டுமின்றி உலகமே இப்படி ஒரு மொழி இருக்கின்றதா? என்பதை திரும்பி பார்க்கும் என்றும், இந்த விஷயத்தில் கமல் கூறியபடி தமிழகத்தில் பாஜகவை வளர்க்க செய்திருந்தாலும் அதில் தவறேதும் இல்லை என்றும் சமூக வலைத்தள பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர். எல்லாவற்றிலும் குறையை கண்டுபிடித்தால் ஒரு தலைவர் என்னதான் செய்வது? என்றும் கமலுக்கு அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கீழடியில் 22 குழிகளை பார்க்க அனுமதியில்லை: தொல்லியல் துறை