Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவிலேயே 'முதன்மை மாநிலமாக தமிழகம்' - அரசுக்கு ராமதாஸ் பாராட்டு!

Advertiesment
ramadoss
, வெள்ளி, 4 அக்டோபர் 2019 (14:36 IST)
இந்தியாவில், ஊரகத் தூய்மை கணக்கெடுப்பில் தமிழகம் தான் சிறந்த மாநிலமாகத் தேர்வாகியுள்ளது. இதற்கு தமிழக மூத்த அரசியல்வாதியும் , பா.ம.க கட்சி நிறுவனருமான டாகடர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 31 ஊரக மாவட்டங்களில் உள்ள சுமார் 800க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் தூய்மை கணக்கெடுப்பு  நடைபெற்றது. இதில், பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடிகள், போன்றவற்றில் அரசுப் பணியாளர்கள் நேரடியாகக் களம் இறங்கி, கிராமத்தில் நிலவும் தூய்மை மற்றும் தூய்மைக்கான கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றைக் குறித்துக் கேட்டறிந்தனர். அதுகுறித்த கிடைத்த மதிப்பெண்கள் அடிப்படையில், இந்தியாவில் உள்ள ஏனைய மாநிலங்களில் கிராமங்களில் நிலவும் தூய்மை மற்றும் தூய்மைக்கான கட்டமைப்பு வசதிகளுகள் ஆகியவற்றோடு மதிப்பெண்கள்  ஒப்பிடப்பட்டு  தமிழகத்திற்கு விருது கிடைத்துள்ளது. குஜராத் மாநிலம் அலகாபாத்தில் நடைபெற்ற தூய்மை பாரத விழாவில் கலந்து கொண்ட தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த விருது பிரதமர் மோடியிடம் பெற்றுக்கொண்டார்.
 
இந்நிலையில் பா.ம.க கட்சி நிறுவனருமான டாகடர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது : 
 
ஊரகத் தூய்மை மற்றும் உட்கட்டமைப்பில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம்  தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரதமரின் கரங்களால் விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக உள்ளாட்சித் துறை அமைச்சர் @SPVelumanicbe அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகள்! என தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமானத்தை காப்பாற்றிய பணியாளர் – அதிபர் ட்ரம்ப் பாராட்டு !