Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெதர் அப்டேட்: இன்று 11 மாவட்டங்களில் கனமழை... எங்கெங்கு தெரியுமா?

வெதர் அப்டேட்:  இன்று 11 மாவட்டங்களில் கனமழை... எங்கெங்கு தெரியுமா?
, திங்கள், 11 அக்டோபர் 2021 (13:02 IST)
இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக  தமிழகத்தில் அக்டோபர் 13 ஆம் தேதி வரை தொடர் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 
அதன்படி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, குமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள், சேலத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு அப்பாவாய் மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்! – ட்விட்டரில் கமல்ஹாசன் உருக்கம்!