Publish Date: Sun, 10 Oct 2021 (07:59 IST)
Updated Date: Sun, 10 Oct 2021 (08:18 IST)
தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் எடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இன்று மழை பெறும் மாவட்டங்கள் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறிய மாவட்டங்கள் பின்வருமாறு: நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை
மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அநேக இடங்களில் இன்று மழை பெய்யும் என்றும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது தமிழகத்தின் பெரும் பகுதிகளில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது