Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குற்றவாளியின் படம் சட்டசபையிலா? ஸ்டாலின் காட்டம்!

Advertiesment
குற்றவாளியின் படம் சட்டசபையிலா? ஸ்டாலின் காட்டம்!
, ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (12:35 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை நாளை (12 ஆம் தேதி) சட்டபையில் திறக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியது. சென்னை மெரினா கடற்கரையில் அவருக்கு மணி மண்டபம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது சட்டசபையில் அவரது படத்தை திறப்பது குறித்து செய்தல் வெளியாகின்றன. 
 
இந்நிலையில் இதற்கு ஸ்டாலின் மற்றும் விஜய்காந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஸ்டாலின் கூறியதாவது, ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. குற்றவாளியின் படத்தை சட்டசபையில் திறக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை என தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறியதாவது, சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி ஜெயலலிதா என்பது கவனிக்கப்பட வேண்டியது. அதனால் சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்க கூடாது என கூறியுள்ளார்.
 
ஆனால், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படம் திறப்பதில் தவறில்லை என கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் பூனை பிரியாணி: அதிர்ச்சியில் பிரியாணி பிரியர்கள்