Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாணவர்கள் பங்கேற்ற அரசு விழாவில் ஆபாச நடனம்: என்ன கொடுமை சார் இது!

Advertiesment
மாணவர்கள் பங்கேற்ற அரசு விழாவில் ஆபாச நடனம்: என்ன கொடுமை சார் இது!
, வியாழன், 14 டிசம்பர் 2017 (13:51 IST)
நாமக்கல் மாவட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்ற தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த பொருட்காட்சி ஒன்றின் தொடக்க விழாவில் வட மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை வைத்து ஆபாசமாக பெல்லி டான்ஸ் ஆட வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசு பொருட்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில், அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
 
தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற இந்த பொருட்காட்சியின் தொடக்க விழாவில் வெளி மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆபாசமாக நடனமாடியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் முகம் சுளித்தவாறு இருந்தனர். ஆனாலும் தொடர்ந்து ஆபாச நடனம் நடந்துகொண்டு தான் இருந்தது.
 
அந்த ஆபாச நடனம் நடந்த மேடையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படமும், துணை முதல்வர் ஓபிஎஸ் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. நடந்த கூத்துக்களை பார்த்த பொதுமக்கள் இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்கள் முடக்கம்...