Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 28 April 2025
webdunia

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பெரிய பாண்டியன் உடலுக்கு நேரில் அஞ்சலி

Advertiesment
EPS And OPS Final Tribute to periyapandiyan
, வியாழன், 14 டிசம்பர் 2017 (13:13 IST)
ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுடப்பட்டு உயிரிழந்த மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி  மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற காவல்துறை ஆய்வாளர் பெரிய பாண்டியன் நேற்று ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று அவரது உடல் ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. 
 
பெரியபாண்டியனின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருப்பு பேட்ஜுடன் அஞ்சலி செலுத்தினார். அவரோடு சேர்த்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் வீரமரணம் அடைந்த பெரியபாண்டியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜிஷா கொலை வழக்கு ; கொலையாளிக்கு தூக்கு தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு