இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி கம்பி நீட்டி விட்டு, இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி சென்ற விஜய் மல்லையாவின் ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பாலான சொத்துக்களை முடக்கி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கடன் வாங்கிய விஜய் மல்லையா அதை திருப்பு செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி சென்றுள்ளார். அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த சிபிஐ தரப்பில் இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதற்கிடையில், விஜய் மல்லையாவிற்கு கடன் கொடுத்த 12 வங்கிகள் அதே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், இங்கிலாந்தில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்கி வைத்து தங்களுக்கான கடன் தொகையை பெற்றுத்தரும் படி கோரிக்கை வைத்திருந்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பாலான சொத்துக்களை இங்கிலாந்து நீதிமன்றம் முடக்கியது. இங்கிலாந்தில் விஜய் மல்லையா ஆரஞ்சு இந்தியா கோல்டிங்ஸ், யுனைடெட் மது நிறுவனம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறார். மேலும், இங்கிலாந்து விர்ஜின் தீவுகளிலும் அவருக்கு சொந்தமாக இடங்கள் உள்ளது. இவற்றின் பெரும் பகுதிகளைத்தான் நீதிமன்றம் முடக்கியுள்ளது.