தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையை முன்னேற்றம் அடையச் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆசிரியர்களின் பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்ற கலந்தாய்வில் 900 பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறையை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல அரசு பல்வேறு நடவடிக்ககளை எடுத்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற தலைமை ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், 35 மாவட்டங்களில் மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்களும், 5 மாவட்டங்களில் முதன்மை கல்வி அதிகாரி பணியிடங்களும் கடந்த 6 மாதமாக காலியாக இருப்பதாக தெரிவித்தனர். பொதுக்குழுவில் காலி பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பல தலைமை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அதிகாரிகளின் பணிகளையும் கூடுதலாக கவனிப்பதால் அவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. எனவே காலி பணியிடங்களை நிரப்பினால் தான் தமிழகத்தில் கல்வி தரம் மேம்படும் என்று தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.