Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என கூற நீதிமன்றம் யார்? சீமான்

Advertiesment
நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என கூற நீதிமன்றம் யார்? சீமான்
, வியாழன், 30 ஜனவரி 2020 (17:20 IST)
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வேண்டாம் என தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையில் இது குறித்து பல்வேறு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின் முடிவில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது’ என தீர்ப்பளித்தது. இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
 
நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என சொல்ல நீதிமன்றம் யார்? என கேட்கிறேன். குற்றம் செய்கிறவர்கள், கொள்ளை அடிப்பவர்கள், கொலை செய்பவர்கள், ஊழல் செய்ப்வர்களை விசாரித்து தண்டனை கொடுப்பதுதான் நீதிமன்றத்தினுடைய வேலை.
 
மாணவர்கள் படிப்பு விஷயங்களில் தலையிடுவது என்ன நியாயம். நீங்கள் எல்லாரும் நீட் தேர்வு எழுதித்தான் வந்தீர்களா? இது எப்பேர்ப்பட்ட சர்வாதிகாரம். நீட் தேர்வை ரத்து செய்யமுடியாது என நீதிமன்றம் முடிவு செய்வதால் இது பாராளுமன்ற, சட்ட மன்ற ஜனநாயகமா அல்லது நீதிமன்ற ஆட்சியா? என இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூகுள் நிறுவனம் மூடல் ! கொரோனா வைரஸ் பீதி எதிரொலி !