Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சி.ஏ.ஏ எதிர்ப்பு என்ற பெயரில் பயங்கரவாதிகள் போராட்டம் - ஹெச். ராஜா குற்றச்சாட்டு

சி.ஏ.ஏ எதிர்ப்பு என்ற பெயரில் பயங்கரவாதிகள் போராட்டம்  - ஹெச். ராஜா குற்றச்சாட்டு
, புதன், 29 ஜனவரி 2020 (13:34 IST)
தமிழகம் முழுவதும் சிஏஏ எதிர்ப்பு என்ற பெயரில் பயங்கரவாதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் திருச்சி மாவட்டம் கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் விஜயராகுவின் இல்லத்திற்கு பாஜக தேசிய செயலர் ராஜா சென்று அவரது, குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதுடன், ரூ.50,000 நிதி உதவி வழங்கினார்.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  அவர் கூறியதாவது :
 
தமிழகம் முழுவதும் சிஏஏ ( இந்திய குடியுரிமை திருத்த சட்டம் ) என்ற பெயரில் பயங்கரவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தான் விஜயராகு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.
 
மேலும், இந்தக் கொலை விவகாரத்தில் மதப் பிரச்சனை இல்லை என ஐஜி அமல்ராஜ் கூறிய கருத்தில் தனக்கு திருப்தி இல்லை என தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னைய டார்ச்சர் பண்ணுறபோது இது தெரியலையா?! – முன்னாள் துணை முதல்வர் கேள்வி!