Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துக்ளக் வாங்கி படிங்கடா புத்தி வரட்டும்... ரஜினி ரசிகர்களுக்கு சீமான் அட்வைஸ்!

Advertiesment
துக்ளக் வாங்கி படிங்கடா புத்தி வரட்டும்... ரஜினி ரசிகர்களுக்கு சீமான் அட்வைஸ்!
, புதன், 29 ஜனவரி 2020 (11:04 IST)
மண் சோறு சாப்பிடும் ரஜினி ரசிகர்கள் துக்ளக் வாங்கி படிக்க வேண்டும் என சீமான் அட்வைஸ் கொடுத்துள்ளார். 
 
துக்ளக் பத்திரிக்கையின் 50 ஆவது ஆண்டு விழாசில் ரஜினி பேசியது இப்போது வரை தீராத சர்ச்சையாகவே உள்ளது. இவ்விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஒருவர் கையில் முரசொலி வைத்திருந்தால் அவரை திமுககாரர் என்று சொல்லி விடலாம்.
 
அதே போல், துக்ளக் வைத்திருந்தால் அவரை அறிவாளி என்று சொல்லி விடலாம். துக்ளக் பத்திகை வைத்திருந்ததால் அவர் அறிவாளியானாரா? அல்லது துக்ளக் படித்ததால் அறிவாளியானாரா? என்று தெரியாது என பேசினார். 
 
இதற்கு தற்போது பதில் அளிக்கும் விதமாக மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ரஜினி நடித்த அத்தனை படங்களும் வன்முறைப் படங்கள், ஆனால் வன்முறை எதற்கும் தீர்வாகாது என்று ரஜினி புத்தி சொல்கிறார்.
 
துக்ளக் வைத்திருப்பவர்கள் அறிவாளி என்று சொன்ன ரஜினி, மண் சோறு சாப்பிடும் தனது ரசிகர்களுக்கு அறிவு வர துக்ளக் வாங்கி கொடுக்கட்டும் என்றும் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிமேல் நீ விமானம் பக்கம் வரவே கூடாது! – கோஸ்வாமியை திட்டியவருக்கு கிடைத்த தண்டனை!