5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு குறித்து மத்திய அரசும் மாநில அரசும் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வருகிற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனிடையே ”பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அடுத்த இரண்டு மாதங்களில் மறு தேர்வு எழுத வேண்டும், இது மாணவர்களுக்கு பெரும் மன உலைச்சலை உண்டாக்கும், ஆதலால் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக மத்திய அரசும், மாநில அரசும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் மறுத்தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் குழந்தைகளின் நிலை என்ன?” என்றும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.