Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்னியர்கள் பாமகவிற்கு வர வேண்டாம், ஆனால் ஓட்டு மட்டும் போடுங்கள்: ராமதாஸ்

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (08:15 IST)
மாற்று கட்சிகளில் இருக்கும் வன்னியர்கள் பாமகவுக்கு வரவேண்டாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் பாமக வேட்பாளருக்கு ஓட்டுப் போடுங்கள் என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார் 
 
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அவர் பேசியபோது இட ஒதுக்கீடு முன்பே கிடைத்து இருந்தால் நாம் கூட்டணி இல்லாமலேயே தமிழகம் முழுவதும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும் என்றும் ஆனால் தாமதமாக கிடைத்தது மட்டுமின்றி அந்த இட ஒதுக்கீடும் நீதிபதியால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார் 
 
மேலும் மாற்றுக் கட்சியில் உள்ள வன்னியர்கள் பாமகவிற்கு வராவிட்டாலும் பரவாயில்லை என்றும் அவர்கள் பாமக வேட்பாளருக்கு ஓட்டு போட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். வன்னியர்களுக்கு மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தான் நான் போராடி வருகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments