Publish Date: Thu, 02 Dec 2021 (13:12 IST)
Updated Date: Thu, 02 Dec 2021 (13:15 IST)
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது என்பது குறிபிடத்தக்கது
இந்த நிலையில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்தை இரத்து செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுக்களை அடுத்த வாரம் விசாரணை செய்ய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுப்ரீம் கோர்ட் மூலம் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்