Publish Date: Thu, 29 Jun 2023 (07:35 IST)
Updated Date: Thu, 29 Jun 2023 (07:37 IST)
பக்ரீத் பண்டிகையை அடுத்து பலர் சொந்த ஊர் செல்ல இருக்கும் நிலையில் திடீரென தனியார் பேருந்துகள் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி உள்ளதாக பயணிகள் அதிர்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.
இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதால் நாளை ஒருநாள் விடுமுறை எடுத்தால் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏற்கனவே சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டாலும் தனியார் பேருந்துகளிலும் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.
ஆனால் தனியார் பேருந்து பொதுமக்கள் கூட்டத்தை பார்த்து திடீரென இருமடங்காக கட்டணத்தை உயர்த்தி விட்டதாக பயணிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்
குறிப்பாக சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்வதற்கு 600 ரூபாய் வழக்கமாக வசூலிக்கப்படும் நிலையில் தற்போது 1300 ரூபாய் வசூலிக்கப்படுவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது