Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஷ்யாவுக்கே ரிவீட் அடித்த வாக்னர் கும்பல்..! ரோஸ்டோவ் ஆன் டானிலிருந்து வெளியேற்றம்!

Advertiesment
Wagner Group
, ஞாயிறு, 25 ஜூன் 2023 (09:20 IST)
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வாக்னர் ராணுவக்குழு ரஷ்யாவுக்கு எதிராக திரும்பிய நிலையில் தற்போது ரோஸ்டோவ் ஆன் டான் பகுதியிலிருந்து வெளியேற தொடங்கியுள்ளனர்.



உக்ரைன் மீது கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் உக்ரைனின் பல பகுதிகளையும் கைப்பற்றி வருகிறது. ரஷ்யாவை எதிர்க்க உக்ரைன் ஐரோப்பிய நாடுகளின் நிதியுதவி மற்றும் ஆயுத உதவியை பெற்று தொடர்ந்து வருகிறது.

இந்த போரில் ரஷ்யாவின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழுவும் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டு வருகிறது. ரஷ்யாவிடம் ஆயுதம் பெற்றுக் கொண்டு உக்ரைன் மீது போர் நடத்தும் இந்த வாக்னர் குழு பணம் பெற்று வேலை செய்யும் ஒரு கூலிப்படை தனியார் ராணுவமாகும்.

இந்நிலையில் சமீப காலமாக ரஷ்ய ராணுவத்திற்கும், வாக்னர் குழுவிற்கும் இடையே மோதல்கள் எழுந்துள்ளது. இந்நிலையில்தான் வாக்னர் குழு ரஷ்ய ராணுவ கட்டுப்பாட்டு  மையம் அமைந்துள்ள ரோஸ்டோவ் ஆன் டோன் பகுதியை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியானது.

அதனை தொடர்ந்து வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி புரிகோஸை கைது செய்யவும், கிளர்ச்சியாளர்களை கண்டதும் சுடவும் ரஷ்ய அரசு உத்தரவிட்டது. இதனால் வாக்னர் குழுவுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் குவிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. தற்போது வாக்னர் குழு ரோஸ்டோவ் ஆன் டோன் பகுதியில் இருந்து வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வாக்னர் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மணமகனுக்கு பிரதமர் பெயர் கூட தெரியவில்லையா? திருமணத்தை நிறுத்திய மணமகள்..!