Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரண்டே இரண்டு குண்டு பல்பு.. மின்கட்டணம் ஒரு லட்ச ரூபாய்: அதிர்ச்சி அடைந்த பாட்டி..!

இரண்டே இரண்டு குண்டு பல்பு.. மின்கட்டணம் ஒரு லட்ச ரூபாய்: அதிர்ச்சி அடைந்த பாட்டி..!
, சனி, 24 ஜூன் 2023 (16:06 IST)
இரண்டே இரண்டு குண்டு பல்பு மட்டுமே பயன்படுத்தும் பாட்டி ஒருவரின் வீட்டிற்கு ஒரு லட்ச ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் 90 வயது மூதாட்டி ஒருவர் கரண்ட் பில் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் வெறும் 2 குண்டு பல்புகள் மட்டுமே பயன்படுத்திக் கொண்டு வரும் நிலையில் அவருக்கு மின் கட்டணம் 1,03,315 ரூபாய் செலுத்த வேண்டும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதனை அடுத்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஒவ்வொரு மாதமும் 70 ரூபாய் 80 ரூபாய் மட்டுமே மின் கட்டணம் செலுத்தி வந்த நிலையில் ஒரு லட்சம் என்றதும்  அவர் அதிர்ச்சி அடைந்தார் 
 
இதனை அடுத்து அவரது மின்மீட்டரை சோதனை செய்து பார்த்தபோது அதில் கோளாறு என்பது தெரிந்து வந்தது. இதனை அடுத்து ஒரு லட்ச ரூபாய் கட்ட வேண்டிய தேவை இல்லை என கர்நாடக மாநில மின்சார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மணிப்பூர் கலவரம் குறித்து அனைத்து கட்சி கூட்டம்: திமுக, அதிமுக எம்பிக்கள் பங்கேற்பு..!