Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினிக்கு 'நமது அம்மா' நாளிதழ் பாராட்டு.

Advertiesment
ரஜினிக்கு 'நமது அம்மா' நாளிதழ் பாராட்டு.
, செவ்வாய், 17 ஜூலை 2018 (09:06 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது 'தமிழக அரசின் கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அந்த துறையின் அமைச்சர் செங்கோட்டையனுக்கு பாராட்டு தெரிவித்தார். அதேபோல் சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார். ரஜினியின் இந்த கருத்துக்கு நேற்று செங்கோட்டையன் உள்பட ஒருசில அமைச்சர்கள் நன்றி தெரிவித்தனர்
 
இந்த நிலையில் அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான 'நமது அம்மா' நாளிதழ் இன்று கட்டுரை ஒன்றில் ரஜினியை பாராட்டி எழுதியுள்ளது. ‘உரக்கச் சொன்ன உச்ச நட்சத்திரம்’ என்ற தலைப்பில் நமது அம்மா நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் தமிழக அரசின் கல்விப்புரட்சியை ரஜினி பாராட்டியுள்ள்தாகவும், 8 வழிச்சாலை அமைக்கும் திட்டம் நாட்டிற்கு நலம் பயக்கும் என்ற உண்மையை உரக்க சொல்லியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
webdunia
இருப்பினும் அதிமுக அரசை அவர் ஓட்டுமொத்தமாக பாராட்டியதாக கூற முடியாது என்றும், ரஜினிகாந்த் பாராட்ட வேண்டியதை பாராட்டி, குட்ட வேண்டியதை குட்டுபவர் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் வரும்போது அதிமுக, பாஜகவுடன் ரஜினி கூட்டணி என்பது சாத்தியமே இல்லாதது என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொது இடங்களில் மது அருந்தினால் ரூ.2,500 அபராதம் - முதலமைச்சர் அதிரடி