கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதாக கூறியது மட்டுமின்றி கட்சி ஆரம்பித்து அதை தேர்தல் கமிஷனிலும் பதிவு செய்துவிட்டார். நாளையே தேர்தல் என்றாலும் கமல் கட்சி அந்த தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளது.
ஆனால் ரஜினிகாந்த் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பைத்தான் ஏற்படுத்தியுள்ளார். கட்சி ஆரம்பிப்பதை இன்னும் அவர் உறுதி செய்யவும் இல்லை கட்சி தேதி குறித்த அறிவிப்பும் இல்லை.
இந்த நிலையில் ரஜினி அதிமுகவின் தலைவராக போவதாக வதந்திகளை ஒருசில ஊடகங்கள் பரப்பி வருகிறது. இதேபோன்ற ஒரு வதந்தி அஜித்தை வைத்தும் சில மாதங்களுக்கு முன் பரவியது என்பது தெரிந்ததே
ரஜினியின் ஒரே அடையாளம் அவர் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இருப்பார் என்பதுதான். அவர் கட்சி ஆரம்பித்தால் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி வைக்க மாட்டார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் ரஜினி, அதிமுக தலைமையை ஏற்பார் என்று கூறி வருவது கற்பனை என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற விதி இருப்பதால் பொறுத்திருந்து பார்ப்போம்