பொது இடங்களில் மது அருந்தினால் 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
மதுப் பிரியர்கள் பொது இடங்களில் குடித்துவிட்டு செய்யும் அலப்பறைகளை சொல்லி மாளாது. குடித்து விட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதும் கீழ்த்தராக பேசுவதுமாய் அவர்களின் நடவடிக்கை இருக்கும்.
எனவே இதனைக் கட்டுப்படுத்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், கோவாவில் பொது இடங்களில் மது குடித்தால் 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்த நடைமுறை வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார்.