பிரதமர் மோடிக்கு 2 கோரிக்கைகளை வைக்கிறேன்.. செய்வீர்களா? ஜெயலலிதா பாணியில் விஜய் கேள்வி..!

Siva
வியாழன், 21 ஆகஸ்ட் 2025 (19:15 IST)
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில், அதன் தலைவர் விஜய் தனது உரையின் மூலம் சில முக்கியமான கோரிக்கைகளையும், அரசியல் நிலைப்பாடுகளையும் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக பிரதமர் மோடிக்கு அவர் இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அவர் வைத்த கோரிக்கைகள் இவைதான்:
 
இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு வரும் 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்காக, கச்சத்தீவை மீட்டுத் தர வேண்டும்
 
நீட் தேர்வினால் நடக்கும் துன்பங்களைச் சுட்டிக்காட்டி, நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இந்த இரண்டு கோரிக்கைகளை "செய்வீர்களா பிரதமர் அவர்களே" என்று ஜெயலலிதா பாணியில் கேள்வி எழுப்பினார்.
 
மேலும்  "கட்சி தொடங்க முடியாது என்றார்கள், தொடங்கிவிட்டோம்; மாநாடு நடத்த முடியாது என்றார்கள், நடத்திக் காட்டிவிட்டோம். அடுத்து ஆட்சியைப் பிடிக்க முடியாது என்கிறார்கள். ஆட்சியைப் பிடித்துக் காட்டட்டுமா?" என்று தொண்டர்களுக்கு மத்தியில் உற்சாகமூட்டினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவிடம் பாஜக கேட்கும் தொகுதிகள்!.. எடப்பாடி பழனிச்சாமி ஷாக்!...

திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

கொல்கத்தா நிகழ்வின்போது ஏற்பட்ட குழப்பம்.. மெஸ்ஸியிடம் மம்தா பானர்ஜி வருத்தம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: வீட்டின் கதவை உடைத்து கைது செய்ததாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments