மதுரையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவுள்ள நிலையில் இம்மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் 10 பேர், கடுமையான வெயில் காரணமாக மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 2.5 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மாநாட்டிற்காக 506 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
காலையிலேயே அனைத்து இருக்கைகளும் நிரம்பியதால், தொண்டர்கள் கடும் வெப்பத்தின் தாக்கத்தில் அவதிப்பட்டனர். வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள, சிலர் தரையில் விரிக்கப்பட்ட விரிப்புகளைப் பிய்த்து, தற்காலிகக் கூடாரங்களை அமைத்தனர். இன்னும் சிலர், நாற்காலிகளை நிழற்குடையாகப் பயன்படுத்தினர்.
இந்த நிலையில் வெப்பம் தாங்க முடியாமல் மயக்கமடைந்த 10 தொண்டர்கள், அருகில் உள்ள வளையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.