Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் கொரோனா நோயாளிகள் விவரங்கள் டிஜிட்டல் போர்டில்..! – மா.சுப்பிரமணியன், உதயநிதி திறந்து வைத்தனர்!

Advertiesment
சென்னையில் கொரோனா நோயாளிகள் விவரங்கள் டிஜிட்டல் போர்டில்..! – மா.சுப்பிரமணியன், உதயநிதி திறந்து வைத்தனர்!
, செவ்வாய், 8 ஜூன் 2021 (12:46 IST)
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரங்களை உறவினர்கள் தெரிந்து கொள்ளும் தகவல் உதவி மைய வசதியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் அதிகரித்துள்ளனர். இதனால் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், நோயாளிகள் நிலை உள்ளிட்டவற்றை நோயாளிகளின் உறவினர்கள் தெரிந்து கொள்வதற்கான தகவல் உதவி மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திறந்து வைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநிலங்களுக்கு தடுப்பூசிகள்: மத்திய அரசின் புதிய கொள்கை!