Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் இன்று தங்கம் விலை உயர்வு!

சென்னையில் இன்று தங்கம் விலை உயர்வு!
, செவ்வாய், 8 ஜூன் 2021 (12:12 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக உள்ளது என்பதும் கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை சரிந்து கொண்டே வந்ததால் தங்கம் வாங்க இது சரியான நேரம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் விலை குறித்து தற்போது பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதாவது 22 காரட் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.18 உயர்ந்து ரூ.4630-க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் தங்கம் பவுனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.37040 -க்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சுத்தத்தங்கம் 24 காரட் விலை 8 கிராம் ரூ.39912 என விற்பனையாகிறது.
 
அதேபோல் வெள்ளியின் விலையும் சென்னையில் உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி விலை 20 பைசா உயர்ந்து ரூ.76.30-க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.76,300 ஆகி வருகிறது என்பது குறிப்ப்பிடத்தக்கது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பறிமுதல் செய்த சரக்கை சைடு கேப்பில் விற்ற காவலர்கள்! – பணியிடை நீக்கம்!