கொரோனா பாதிப்புக்கு ஏற்றவாறு தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு புதிய கொள்கை வடிவ விதிமுறைகளை அறிவித்துள்ளது
மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் தடுப்பூசிகள் தரப்படும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒதுக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது
மக்கள் தொகை அடிப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் தடுப்பூசிகளை மாநிலங்கள் வீணடித்தால் ஒதுக்கப்படும் தடுப்பூசிகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
மேலும் ஜூன் 21 முதல் புதிய தடுப்பூசி கொள்கை அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ள மத்திய அரசு தனியார் மருத்துவமனைகள் சரியான அளவில் தடுப்பூசி செலுத்துவதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது