Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எம் ஜி ஆர் கொண்டுவந்த சட்டத்தை நிறுத்தி வைத்த எடப்பாடி பழனிச்சாமி… தமிழக முதல்வருக்கு ரவிக்குமார் எம் பி கோரிக்கை!

Advertiesment
எம் ஜி ஆர் கொண்டுவந்த சட்டத்தை நிறுத்தி வைத்த எடப்பாடி பழனிச்சாமி… தமிழக முதல்வருக்கு ரவிக்குமார் எம் பி கோரிக்கை!
, செவ்வாய், 8 ஜூன் 2021 (11:19 IST)
தமிழ்நாடு அரசு வேலைகளில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் சட்டத்தை கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளதாக ரவிக்குமார் எம்பி கூறியுள்ளார்.

இது சம்மந்தமாக விழுப்புரம் எம்பி ரவிக்குமார் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் அரசுப் பணிக்கு நியமனம் செய்யும்போது முன்னுரிமை தரப்பட வேண்டியவர்களின் பட்டியலில் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களையும் சேர்த்துத் தமிழக அரசு 1986 ஆம் ஆண்டில் ஆணையிட்டுள்ளது. 2006 முதல் 2011 வரை அன்றைய திமுக ஆட்சியின் போது தமிழக அரசின் இடைநிலை ஆசிரியர் பணி நியமனங்களில் கலப்புத் திருமணம் செய்துகொண்ட 287 பேர் நியமனம் பெற்றுள்ளனர்.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளாகக் கலப்புத் திருமணம் செய்து கொண்ட எவரும் ஆசிரியர் பணி நியமனம் செய்யப்படவில்லை. மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தைக் கடந்த அதிமுக அரசு செயல்படுத்தவில்லை. சமூக நீதியில் அக்கறை கொண்ட தங்களது தலைமையிலான அரசு இந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உரிய ஆணையை வழங்குமாறு வேண்டுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிக்கன் ஆர்டர் செய்தவருக்கு வறுத்த துணியை அனுப்பிய உணவகம்!