உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் குறித்து ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் என கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி மக்களை வென்றெடுப்பேன் என்று விஜய் பிரசாரம் செய்வது குறித்து "தமிழக மக்களையே வென்றெடுக்க முடியாத நடிகர் விஜய், புதுச்சேரி மக்களை வென்றெடுப்பேன் என்பது 'கூரையேறி கோழி பிடிக்காதவர் - வானத்தில் ஏறி வைகுண்டத்தை காட்டுவேன்' என்று சொல்வது போன்றதாகும்" என்று கிண்டல் செய்தார்.
மேலும், "அவர் முதலில் தேர்தலில் நிற்கட்டும், சில இடங்களில் வெற்றி பெறட்டும், அதன் பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்கட்டும். அதன்பிறகே புதுச்சேரிக்கு செல்லலாம்" என்றும் அவர் விமர்சித்தார்.