Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

Advertiesment
பிரவீன் சக்கரவர்த்தி

Mahendran

, புதன், 10 டிசம்பர் 2025 (12:30 IST)
காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யை சந்தித்த விவகாரம் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
 
தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் நிலையில், பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்தது, காங்கிரஸுக்குள் இருக்கும் தி.மு.க. ஆதரவு தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விஜய்யிடம் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்புள்ள 75 தொகுதிகளை கேட்டு பேசியதாக தகவல் வெளியானது.
 
இதனால் நெருக்கடிக்கு ஆளான பிரவீன் சக்கரவர்த்தி, ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விளக்கமளித்தார். "எல்லா சந்திப்புகளுக்கும் அரசியல் நோக்கம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பாகவே இருந்திருக்கலாம். இதில் எனக்கு எந்தத் தவறும் தெரியவில்லை. 
 
இந்தச் சந்திப்பால் தி.மு.க. கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படவில்லை" என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?