Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எங்கு கேட்டும் வேலைக் கிடைக்கவில்லை… அதற்காக குழந்தையைக் கடத்திய நபர்!

Advertiesment
எங்கு கேட்டும் வேலைக் கிடைக்கவில்லை… அதற்காக குழந்தையைக் கடத்திய நபர்!
, வியாழன், 17 செப்டம்பர் 2020 (16:57 IST)
சென்னையில் வேலை வேண்டும் என்பதற்காக நண்பரின் குழந்தையைக் கடத்திச் சென்றுள்ளார் ஒரு நபர்.

சென்னை, ராயபுரம் ரயில்வே நிலைய பகுதியில் அமைந்துள்ள தற்காலிக குடியிருப்பில் வசித்து வருபவர்கள் பப்லு மற்றும் அவரது குடும்பத்தினர். பப்லுவுக்கு மர்ஜினா என்ற இரண்டு வயது குழந்தை உள்ளது. கொத்தனராக பணியாற்றும் பப்லுவுக்கு சுனில் என்ற நண்பர் உண்டு. இவர் பப்லுவைப் பார்க்க வந்தபோது குழந்தைக்கு மிட்டாய் வாங்கி தருவதாக சொல்லி கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால் அவரும் குழந்தையும் திரும்பி வரவே இல்லை. இதையடுத்து பப்லு காவல் நிலையத்தில் புகாரளிக்க, அவர்கள் திவிர விசாரணையில் 10 நாட்களுக்குப் பிறகு செங்கல்பட்டில் சுனில் மற்றும் மர்ஜினா ஆகியோரைக் கண்டுபிடித்தனர். சுனிலைக் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியதில் ஆதார் அட்டை உட்பட பல ஆவணங்கள் காட்டியும் சுனிலுக்கு வேலை கிடைக்காத காரணத்தால் மர்ஜினாவை தன் குழந்தை என சொல்லி உணவுக்கே வழியில்லை என சொல்லி அனுதாபத்தில் வேலை வாங்கலாம் என இந்த கடத்தலை செய்ததாக சொல்லியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவசாயிகளுக்கு 50 ஆயிரம் இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்படும் - மின்வாரியம் அறிவிப்பு