Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

100 நாள் வேலைத்திட்டத்தின் காரணகர்த்தா ரகுவன்ஷ் பிரசாத் சிங் மறைவு… அரசியல் தலைவர்கள் அஞ்சலி!

100 நாள் வேலைத்திட்டத்தின் காரணகர்த்தா ரகுவன்ஷ் பிரசாத் சிங் மறைவு… அரசியல் தலைவர்கள் அஞ்சலி!
, திங்கள், 14 செப்டம்பர் 2020 (09:59 IST)
காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய ஊரகத்துறை அமைச்சராக இருந்த ரகுவன்ஷ் பிரசாத் சிங் உடல்நலக்குறைவு காரணமாக மறைந்துள்ளார்.

பிஹார் மாநிலத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஊரகத்துறை அமைச்சராகவும் இருந்த ரகுவன்ஷ் பிரசாத் சிங் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பின்னர் குணமானார். அதன் பின்னர் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக இப்போது உயிரிழந்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு மத்திய ஊரகத்துறை அமைச்சராக இருந்த போது 100 நாள் வேலைத்திட்டத்தைக் கொண்டுவர இவர் முக்கியக் காரணமாக இருந்தார். அதன் காரணமாகவே 2009 ஆம் ஆண்டு உலகப் பொருளாதார வீழ்ச்சியின் போது இந்திய பெரியளவில் பாதிக்கப்படவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடி என்னை பாராட்டினார்… தேர்தல் பிரச்சாரத்தில் ட்ரம்ப் பெருமிதம்!