சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்குப் பரவிய கொரோனா மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் தொய்வடையச் செய்தது. இதனால் நாடுகள் மட்டுமல்ல மனிதர்கள் விலங்குகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டனர்.
இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் மக்களின் பெரும்பான்மையாக எதிர்ப்பார்பு ஒரு வேலை மற்றும் அதற்கான சம்பளம்தான்.
இந்த நிலையில், உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் சுமார் ஒருலட்சம் தொழிலாளர்களைப் பணியில் சேர்க்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனால் பெரும்பாலான இளைஞர்கள் வேலை இல்லாதவர்கள் வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள் என பலருக்கும் அமேசானின் இந்த அறிவிப்பு பயனுடையதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். அத்துடன் அமேசான் அமெரிக்கா மற்றும் கனடா நாட்டில் புதிய 100 குடோன்களைத் திறக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது அமேசன்.