Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏரோபிக்ஸ் போட்டியில் வெண்கலம் வென்றது கரூர் பரணி வித்யாலயா

Advertiesment
karur
, ஞாயிறு, 8 ஜனவரி 2023 (21:27 IST)
தேசிய சி.பி்.எஸ்.இ. ஏரோபிக்ஸ் போட்டியில் வெண்கலம் வென்றது கரூர் பரணி வித்யாலயா. அபார சாதனைக்கு அனைத்து தரப்பினர் பாராட்டு!
 
மஹாராஷ்ட்ரா மாநிலம் ஷீரடியில் ஜனவரி 5,6,7 தேதிகளில் தேசிய சி.பி்.எஸ்.இ. ஏரோபிக்ஸ் போட்டிகள் நடைபெற்றன.  இதில் தேசிய இறுதிப் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடிய கரூர் பரணி வித்யாலயா ஏரோபிக்ஸ் அணி நிறைவாக தேசிய வெண்கலம் வென்றது. 
 
தேசிய வெண்கலம் வென்ற கரூர் பரணி வித்யாலயா ஏரோபிக்ஸ் அணியினருக்கு வெற்றிச் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கிப் பாராட்டுகின்றனர் ஆசிய ஏரோபிக்ஸ் விளையாட்டு சம்மேளனத்தின் தலைவர் சந்தோஷ் தேஷ்முக், இந்திய ஏரோபிக்ஸ் சங்க பொதுச் செயலாளர் சந்தோஸ், மஹாராஷ்ட்ரா மாநில அனைத்து சஞ்சீவானி கல்வி நிறுவனங்களின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி விஜய் நாயுடு, ஷீரடி சஞ்சீவானி சர்வதேசப் பள்ளி முதல்வர் சுதா சுப்பிரமணியன் ஆகியோர். வெற்றிச் சான்றிதழ் மற்றும் பரிசுகளைப் பெற்றுக் கொள்கின்றனர் கரூர் பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர்  சொ.ராமசுப்பிரமணியன், உடற்கல்வி ஆசிரியர் சுகன்யா.
 
அருகில் தமிழ்நாடு மூத்த ஏரோபிக்ஸ் நடுவர், பயிற்சியாளர் சிவகாமி மற்றும் தேசிய ஏரோபிக்ஸ் சங்க நிர்வாகிகள்.
 
தேசிய அளவில் வெண்கலம் வென்று கரூருக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள பள்ளியின் ஏரோபிக்ஸ் விளையாட்டு அணி மற்றும் பயிற்சியாளர்களை தாளாளர் S.மோகனரங்கன், செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷனி முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்ரமணியன், முதல்வர் s.சுதாதேவி, துணை முதல்வர் R.பிரியா மற்றும் இருபால் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர் பாராட்டினர்.
 
ஷீரடி, மஹாராஷ்ட்ரா. ஐனவரி 8, 2023. 
 
Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிஸ்டர் 360 டிகிரி: டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு கிடைத்த 'பொக்கிஷம்' சூர்யகுமார் யாதவ்